திருவாடானையில் டிஎஸ்பி அலுவலகத்தில் பெட்டிசன் மேளா

2 months ago 14

திருவாடானை, டிச.18: திருவாடானை, டி.எஸ்.பி அலுவலகத்தில் எஸ்பி சந்தீஸ் உத்தரவின் பேரில் ஒவ்வோர் செவ்வாய் கிழமையும் பொதுமக்கள் நலன் கருதி பெட்டிசன் மேளா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று திருவாடானை டி.எஸ்.பி அலுவலகத்தில் டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற பெட்டிசன் மேளாவில் திருப்பாலைக்குடி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, எஸ்பி.பட்டினம் காவல் நிலையங்கள் மற்றும் திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் புகார் மனுக்களை கொடுத்தனர்.

புகார் மனுக்களின் பேரில் அந்தந்த காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் விசாரித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பெட்டிசன் மேளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதில் பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

The post திருவாடானையில் டிஎஸ்பி அலுவலகத்தில் பெட்டிசன் மேளா appeared first on Dinakaran.

Read Entire Article