திருவாடானை : திருவாடானை அருகே குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவாடானை அருகே துத்தாகுடி ஊராட்சியில் வடக்கு குடியிருப்பு கம்பகோட்டை, செகுடி ஆகிய கிராமங்களுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் வரவில்லை.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் சரி செய்யப்படாததால், அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் 60க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் தேவகோட்டை வட்டாரம் சாலையில் குருந்தங்குடி பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார் ஆண்டிச்சாமி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் இன்னும் சில தினங்களில் குடிதண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுப்பதாக, ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளுடன் கலந்து பேசி உறுதியளித்தார். தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post திருவாடானை அருகே பெண்கள் குடத்துடன் குடிநீர் கேட்டு மறியல் appeared first on Dinakaran.