திருவள்ளூர் ரெயில் விபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

8 months ago 54

புதுடெல்லி,

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது. ரெயில்கள் மோதிக்கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மணிக்கு 109 கி.மீ. வேகத்தில் சென்ற ரெயில், விபத்து நடந்த இடத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. ஒடிசா ரெயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக கவரப்பேட்டையில் ரெயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

இந்த நிலையில், இந்த ரெயில் விபத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

"ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த ரெயில் விபத்து போலவே கவரப்பேட்டையிலும் விபத்து நடந்துள்ளது; ஏராளமான ரெயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. இந்த அரசு விழித்துக்கொள்ளும் முன் இன்னும் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட போகிறது ? . என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article