திருவள்ளூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக சேதம் அடைந்த சாலைகள் உடனடியாக சீரமைப்பு பணி

2 months ago 9

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களாக கன மழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. திருவள்ளூர் கோட்டத்துக்கு உட்பட்ட அம்பத்தூர் உட்கோட்டத்தில் பல்வேறு இடங்களில் மாநில நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கும் கடும் இடையூறு ஏற்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு உத்தரவின்படி, திருவள்ளூர் கோட்ட பொறியாளர் டி.சிற்றரசு மேற்பார்வையில், அம்பத்தூர் உட்கோட்ட பொறியாளர் ஜி.மகேஸ்வரன் தலைமையில், உதவி பொறியாளர் எஸ்.கார்த்தி மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பட்டாபிராம், இந்து நகரில் தேங்கி நின்ற மழை நீரை உடனடியாக அகற்றி சாலையை தற்காலிகமாக சீரமைத்தனர். திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமுல்லைவாயில் மணிகண்டபுரம், அனுமன் நகர், பாலாஜி நகர் உள்பட பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக சேதம் அடைந்த சாலைகள் உடனடியாக சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Read Entire Article