சிவகங்கை, ஜன. 18: சிவகங்கையில் தமிழவையம், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர் நாள் விழா நடைபெற்றது. மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் ராம் பிரபாகர், தமிழவையத்தைச் சேர்ந்த வித்யா கணபதி, முன்னாள் தோட்டக்கலை உதவி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி டி.எஸ்.கே மதுராந்தகி நாச்சியார், அய்யன் திருவள்ளுவர் தமிழோசை மன்ற நிறுவனர் மருத்துவர் அர்ஜூனன், முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குனர் நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தமிழ்ச்சங்கத் தலைவர் அன்புத்துரை, ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முத்துக் கண்ணன், தலைமை ஆசிரியர் ஈஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா ஆண்டை மிகச் சிறப்பாகக் கொண்டாடிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர்.
The post திருவள்ளுவர் நாள் விழா appeared first on Dinakaran.