திருவல்லிக்கேணியில் ரூ. 20 லட்சம் பணம் பறித்த விவகாரம்: கைதான ஐ.டி. அதிகாரிகள் மேலும் ஒரு வழிப்பறி வழக்கில் கைது

2 hours ago 1

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ரூ. 20 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைதான ஐ.டி. அதிகாரிகள் மேலும் ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் கடந்த டிசம்பர் மாதம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கவுத் என்பவரிடம் போலீஸ் என கூறி அவரை கடத்தி சென்று 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங், சன்னி லாய்டு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன் அதிகாரிகள் பிரபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் சம்பவம் நடந்த 4 நாட்களுக்கு முன்பாகவே ஒரு வழிப்பறி வழக்கில் இவர்கள் சம்மந்தப்பட்டுள்ளனர். ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி எனபவரை மிரட்டி அவரிடம் இருந்த 40 லட்ச ரூபாயில் 20 லட்சம் பணத்தை பிடிங்கி கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கிலும் ராஜாசிங், சன்னி லாய்டு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை கைது செய்ததற்கான ஆவணங்களை புழல் சிறை அதிகாரிகளிடம் ஆயிரம்விளக்கு போலீசார் இன்று காலை வழங்கினர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள ஐடி அதிகாரிகள் மற்றும் காவல்துறையுடன் இணைந்து ஆயிரம் விளக்கு வழிப்பறி வழக்கில் சுரேஷ், சதிஷ், பாபு ஆகிய 3 வணிகவரித்துறை அதிகாரிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post திருவல்லிக்கேணியில் ரூ. 20 லட்சம் பணம் பறித்த விவகாரம்: கைதான ஐ.டி. அதிகாரிகள் மேலும் ஒரு வழிப்பறி வழக்கில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article