திருவனந்தபுரத்தில் பரபரப்பு கல்லூரி மாணவர் குத்திக் கொலை: சக மாணவர் கைது

2 months ago 7

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள நகரூர் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த வாலன்டைன் (22) என்பவர் 4ம் ஆண்டு பிடெக் படித்து வந்தார். இந்தநிலையில் இவருக்கும் அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த மிசோரம் மாநிலத்தை சேர்ந்த லம்சங் ஸ்வாலா (22) என்பவருக்கும், இடையே தகராறு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் கல்லூரிக்கு அருகே வைத்து 2 பேரும் மோதிக்ெகாண்டனர். இதில் வாலன்டைனுக்கு கத்திக் குத்து விழுந்தது.இதில் வாலன்டைன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து போலீசார் லம்சங் ஸ்வாலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post திருவனந்தபுரத்தில் பரபரப்பு கல்லூரி மாணவர் குத்திக் கொலை: சக மாணவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article