கடலூர்:
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி கோவில் முழுவதும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கடந்த 29-ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைகள், அக்னி பாராயணம், நித்ய ஹோமங்கள், கும்ப ஆராதனம், பூர்ணாகுதி, மகாசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று இரவு தங்க விசேஷ வாகனத்தில் தேவநாதசாமி உபய நாச்சியாருடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.