சென்னை : திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் ஐடி துறையை மாநில முழுவதும் விரிவுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்களை அமைத்து வருகிறது. அந்த வகையில் சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய நகரங்களில் ஏற்கனவே மினி டைட்டில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடத் தயாரிப்பு, திட்ட மேலாண்மை என கடந்த ஆண்டே முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க, கட்டடத்துக்கான டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.ரூ. 34 கோடி செலவில் 4 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பூங்கா, ஓராண்டில் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இதனால் திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கனோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியது!! appeared first on Dinakaran.