தமிழகத்தில் அச்சப்படும் வகையில் கரோனா பரவல் இல்லை: சுகாதாரத்துறை

2 hours ago 3

சென்னை: தமிழகத்தில் அச்சப்படும் வகையிலான கரோனா பரவல் இல்லை. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. இந்தியாவில் 2020 ஜனவரியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால் 4.47 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில், 4.41 கோடிக்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். தொற்றின் தீவிரத்தாலும், இணை நோய் பாதிப்புகளாலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Read Entire Article