சென்னை: ‘‘இசை என்பது இறைவனை எளிதாக அடைவதற்கு உள்ள ஒரு மார்க்கம் ’’ என சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பக்தி விருந்து நிகழ்ச்சியில், ‘அமுதசுரபி’ இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் கூறினார்.
கற்பக சுவாசாலயா அறக்கட்டளையின் நிறுவனர் கற்பகதாசன் டாக்டர் ஸ்ரீதரன், டாக்டர் பாலாஜி இணைந்து வழங்கிய முத்தமிழ் பக்தி விருந்து, சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.