திருவண்ணாமலை: பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு மலையே மகேசனாக விளங்கும் அண்ணாமலையை வலம் வந்து (கிரிவலம்) வழிபடுகின்றனர். அதன்படி, ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 10ம் தேதி அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி அதிகாலை 3.08 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே, 11ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையொட்டி, கிரிவல பக்தர்களுக்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், காட்பாடி மற்றும் விழுப்புரம் வழித்தடங்களில் திருவண்ணாமலை – சென்னை பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
The post திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நாள் அறிவிப்பு appeared first on Dinakaran.