திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரை தரிசிக்க குறுக்கு வழியில் சென்றவர்கள் மீது தாக்குதல்

2 weeks ago 7

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர். பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசை நின்று சாமி தரிசனம் செய்தனர். அவ்வாறு வரிசையில் வந்த சென்னை சேர்ந்த விக்னேஷ், பாலாஜி, ஹரிகரன், சூர்யா ஆகிய 4 பேர் அம்மன் சன்னதி கொடி மரத்தின் அருகே வரும் பொழுது வரிசையில் இருந்து இரும்பு தடுப்பை தாண்டி வெளியே வந்து அம்மன் சன்னதிக்குள் குறுக்கு வழியாக செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அம்மன் சன்னதியில் பணியாற்றிய கோவில் ஊழியர் பாண்டியன் அவர்களை தடுத்து கண்டித்ததாக தெரிகிறது. இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவர்கள், பாண்டியனை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், பாலாஜி, ஹரிகரன், சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Read Entire Article