லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தவர் சஞ்சய். இவர் கடந்த 2009ம் ஆண்டு மமுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த 2 வயது குழந்தையை சஞ்சய் மின்சாரத்தை பாயச்செய்து கொலை செய்துள்ளார். பின்னர், குழந்தையின் உடலை வீட்டிற்கு வெளியே வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி சஞ்சயை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், அவர் நேபாளத்திற்கு தப்பிச்சென்றுவிட்டார். இதையடுத்து, சஞ்சய் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சஞ்சயை போலீசார் நேற்று கைது செய்தனர். நேபாளத்தில் தலைமறைவாக இருந்த சஞ்சய் மீண்டும் நெய்டா வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் செக்டார் 62 பகுதியில் தலைமறைவாக இருந்த சஞ்சயை கைது செய்தனர்.