
திருவண்ணாமலை மிருகண்டா அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், மிருகண்டா நதி அணையில் இருந்து பாசனத்திற்காக 17 ஏரிகளின் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு 03.05.2025 நண்பகல் 12.00 மணி முதல் வினாடிக்கு 120.00கன அடி வீதம் 09.05.2025 வரை 6 நாட்கள் 62.208 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள (1) காந்தபாளையம் அணைக்கட்டு, (2) நல்லான்பிள்ளைபெற்றாள் அணைக்கட்டு, (3) கங்காலமாதேவி அணைக்கட்டு, (4) கேட்டவரம்பாளையம் அணைக்கட்டு, (5) கங்காலமாதேவி அணைக்கட்டு, (6) சிறுவள்ளூர் அணைக்கட்டு, (7) பிள்ளையார் கோவில் அணைக்கட்டு, (8) சிறுவள்ளூர் காலனி அணைக்கட்டு, (9) வில்வாரணி அணைக்கட்டு, (10) அம்மாபுரம் அணைக்கட்டு மற்றும் (11) எலத்தூர் அணைக்கட்டின் கீழ் பயன்பெறும் நேரடி பாசனம் மற்றும் 17 ஏரிகளின் வாயிலாக மொத்தம் 2847.49 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசனவசதி பெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.