திருவண்ணாமலை கோயிலுக்கு திருக்குடைகள் பவனி

2 months ago 6

பொன்னேரி: தேசிய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மற்றும் ஆதிமனி ஆன்மீக பேரவை அறக்கட்டளை இணைந்து, மீஞ்சூரில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, மீஞ்சூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு திருக்குடைகள் வழங்கும் பவனி பெருவிழா நேற்று நடைபெற்றது.

கருமுனி ஆசான் வெங்கடேசன் தலைமையில் சிவஸ்ரீ ஸ்ரீராம், அகோரி மணி, திவாகர் உள்ளிட்ட பலர் குழுவாக திருவண்ணாமலைக்கு சென்றனர். அவர்களை மீஞ்சூரில் இருந்து லட்சுமி காந்தன், சோமு வாகைவூர் அடிகளார், சோமு ராஜசேகர், ராஜமன்னார், கார்த்திக், சிவன், மதன் உள்ளிட்ட பலர் மீஞ்சூரில் இருந்து வழி அனுப்பினர்.

The post திருவண்ணாமலை கோயிலுக்கு திருக்குடைகள் பவனி appeared first on Dinakaran.

Read Entire Article