திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

6 months ago 19

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 86.900 கி.மீ-ல் உள்ள கள்ளிபாளையம் நீர் வெளிப்போக்கி (Outlet) வழியாக திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், உத்தமபாளையம் கிராமத்திலுள்ள வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திற்கு நாளை(8.01.2025) முதல் 18.01.2025 வரை 10 நாட்களில் 240 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்திலுள்ள 6,043 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article