
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இடம்பிடித்துள்ளார். இதனால் பிரசித் கிருஷ்ணா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவுக்கு இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சோயிப் பஷீர்.