திருமலையில் சொர்க வாசல் தரிசனத்திற்கு குறிப்பிடப்பட்ட தேதி, நேரத்தில் மட்டுமே வரிசையில் அனுமதிக்கப்படும்

3 weeks ago 4

*கூடுதல் செயல் அதிகாரி தகவல்

திருமலை : திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் இணைந்து செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வெங்கைய சவுத்திரி பேசியதாவது: ஜனவரி 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை திருமலையில் தொடர்ந்து பத்து நாள் சொர்க்க வாசல் வழியாக அனுமதிக்கப்படும்.

எனவே போலீசார் ஒருங்கிணைந்து செயல்படவும், வாகனப் போக்குவரத்தை சீராக நிர்வகிப்பதையும், போதுமான பார்க்கிங் வசதியையும் ஏற்பாடு உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். திருமலையில் குறிப்பாக வைகுண்ட ஏகாதசி மற்றும் வைகுண்ட துவாதசி நாட்களில் தரிசன டோக்கன்கள் அல்லது தரிசன டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்களுக்கு விரிவான விளம்பரம் செய்ய வேண்டும். இந்த பத்து நாட்களில் திருமலையில் சொர்க வாசல் தரிசனத்திற்கு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே வரிசையில் அனுமதிக்கப்படும்.

எனவே பக்தர்கள் தங்கள் டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரத்தில் மட்டுமே வரிசைகளுக்குள் நுழைய வேண்டும், இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து விரைவில் சுவாமி தரிசனம் செய்து வைக்க வழிவகுக்கும்.

மேலும் வாகன போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பார்க்கிங் இடங்கள் பரவலாக்கப்பட்டு சுமார் 13,000 வாகனங்களுக்கு நிறுத்த திட்டம் தயாரிக்கப்படும். ரம்பகீச்சா ஓய்வு இல்லத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை நிறுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வைகுண்ட ஏகாதசியன்று சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் போலீசாரை கேட்டுக்கொண்டார். மேலும் உள்ளூர் போலீசாருடன் ஆக்டோபஸ் குழுவின் சேவைகளும் தேவைக்கு பயன்படுத்தப்படும் என்றார். இதில் திருப்பதி எஸ்.பி. சுப்பாராயுடு, முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், சி.இ. சத்தியநாராயணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post திருமலையில் சொர்க வாசல் தரிசனத்திற்கு குறிப்பிடப்பட்ட தேதி, நேரத்தில் மட்டுமே வரிசையில் அனுமதிக்கப்படும் appeared first on Dinakaran.

Read Entire Article