திருமயம் அருகே வாகனம் மோதி மலைப்பாம்பு சாவு

1 week ago 2

 

திருமயம்,பிப்.1: திருமயம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மலைப்பாம்பு செத்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளில் மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது தீயணைப்புத் துறையினர் குடியிருப்புகளுக்கு வரும் மலைப்பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதும் அது மீண்டும் வருவதும் தொடர் கதையாகி வந்தது.

இதனிடையே நேற்று திருமயத்தில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பைபாஸ் சாலையில் மலைக்குடிப்பட்டி அருகே உள்ள தனியார் பெட்ரோல் பம்ப் பகுதியில் சாலையை கடக்க முயன்ற சுமார் 6 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறி இறங்கியுள்ளது. இதனால் தலை, உடல் பகுதியில் பலத்த காயமடைந்த மலைப்பாம்பு சாலையோரம் சுருண்டு செத்தது.

The post திருமயம் அருகே வாகனம் மோதி மலைப்பாம்பு சாவு appeared first on Dinakaran.

Read Entire Article