“பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராய் இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” - அண்மையில் திமுக-வில் இருந்து விலகிய சேலம் மத்திய மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழில் அரசன் விலகலுக்காக சொன்ன காரணம் இது.
இது உதாரணம் தான். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல எழில் அரசன்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் கட்சித் தலைமை தங்களை கண்டுகொள்ளவில்லையே என்ற புலம்பலிலும் தவிப்பிலும் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, தங்கள் மாவட்டத்து மந்திரிகள், செயலாளர்கள் தங்களை உதாசீனப்படுத்துவதை எடுத்துச் சொல்லி பரிகாரம் தேடமுடியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.