திருமணம் செய்து கொள்வதாக கூறி கொடூரம்; சட்ட மாணவியை லாட்ஜூக்கு அழைத்து சென்று 3 நண்பர்களுடன் பலாத்காரம் செய்த காதலன்: வீடியோ எடுத்து மீண்டும், மீண்டும் அழைத்ததால் தற்கொலை முயற்சி

1 month ago 4

திருமலை: சட்டக்கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி லாட்ஜிக்கு அழைத்து சென்ற காதலன், தனது நண்பர்கள் 3 பேருடன் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு உல்லாசமாக இருக்க வருமாறு அடிக்கடி மிரட்டியதால் மாணவி தற்கொலைக்கு முயன்றார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் 21 வயது சட்டக்கல்லூரி மாணவி. இவரும் தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்துள்ளனர். அப்போது அந்த மாணவன், ‘நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோம்’ எனக்கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலியை விசாகப்பட்டினத்தில் உள்ள டாபா கார்டனுக்கு அழைத்து சென்றார். அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போதும் உல்லாசமாக இருந்தார்களாம். பின்னர் தன்னுடன் படிக்கும் நண்பர்கள் 3 பேரை அந்த லாட்ஜிக்கு மாணவன் ரகசியமாக வரவழைத்துள்ளார். அதன்படி வந்த அவர்களுடனும் உல்லாசமாக இருக்குமாறு காதலியிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, கடுமையாக எச்சரித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதற்கிடையில் காதலன், தான் எடுத்து வைத்திருந்த வீடியோ குறித்து தெரிவித்து லாட்ஜிக்கு தன்னுடன் உல்லாசமாக இருக்க வருமாறு அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அந்த மாணவி, நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டனர். அப்போது நடந்த சம்பவங்கள் தெரியவந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கஜுவாக்கா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

The post திருமணம் செய்து கொள்வதாக கூறி கொடூரம்; சட்ட மாணவியை லாட்ஜூக்கு அழைத்து சென்று 3 நண்பர்களுடன் பலாத்காரம் செய்த காதலன்: வீடியோ எடுத்து மீண்டும், மீண்டும் அழைத்ததால் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article