திருமணம் ஆகாததால் விரக்தி: சலூன் கடைக்காரர் தற்கொலை

6 hours ago 1

கோவை,

கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 36). சலூன் கடை நடத்தி வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு உறவினர்கள் பல இடங்களில் பெண் தேடினர். ஆனால் திருமணம் தள்ளி போய்க்கொண்டே போனது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரகாஷ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் அவர், தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், பிரகாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Read Entire Article