திருமணத்துக்கு மறுத்த பெண்... மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

3 hours ago 2

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் தொம்மனஹள்ளியை சேர்ந்தவர் சித்தலிங்கையா. கடந்த சில நாட்களுக்கு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்தநிலையில் அந்த பெண் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த சித்தலிங்கையா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு நெலமங்களாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையி்ல் நேற்று காலை சித்தலிங்கையாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல முடியாமல் தவித்தனர். ஏனென்றால் அவர்களிடம் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வாடகை காரில் லிப்ட் கேட்டு, அந்த வாகனத்தில் டிக்கியில் உடலை வைத்து எடுத்து சென்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Read Entire Article