திருமணத்திற்கு சில மணி நேரம் முன்பு ரெயில் முன் பாய்ந்து மணமகன் தற்கொலை

3 weeks ago 6

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரெலி மாவட்டம் சலோன் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 30). இவருக்கும் இன்று திருமணம் நடைபெறவிருந்தது. அமேதி மாவட்டம் அசம்கர் பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருமணத்திற்கு சில மணிநேரம் முன்பு நேற்று இரவு மணமகன் ரவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். லக்னோ, வாரணாசி இடையேயான ரெயில்பாதியில் பனி ரெயில் நிலையம் அருகே சென்ற ரவி அங்கு வந்த சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மணமகன் ரவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article