திருமண கொண்டாட்டங்களுக்காக ஜோயாலுக்காஸில் விவாஹா உத்சவ்

1 month ago 5

சென்னை: ஜோயாலுக்காஸ் நிறுவனம், திருமண கொண்டாட்டங்களுக்காக, விவாஹா உத்சவ் என்ற திருமண கொண்டாட்ட சலுகையை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மணப்பெண்ணும் பவித்திரமான தங்கள் பேரழகை உணர, திருமண உற்சவத்தின் நாயகியாக ஜொலித்திட விதவிதமான கலெக்ஷன்களில் அற்புதமான ஆபரணங்களை வாங்கலாம். இதற்காக தங்கம், வைரம், பிரஸ்ஸியஸ் ஸ்டோன் ஆகியவற்றில் மிகவும் நுட்பமான கலைநயத்துடன் காலங்களை வெல்லும் பேரழகுடன் வடிவமைத்துள்ளது.

மேலும், ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள நகை வாங்கினால், 10 கிராம் வெள்ளிக் கட்டியை இலவசமாக அளிக்கிறது. கூடுதலாக வைரம், அன்கட் வைரம், பிரஸ்ஸியஸ் ஸ்டோன் இவற்றின் மதிப்பில் பிளாட் 25% தள்ளுபடியை வழங்குகிறது. இந்த பிரத்யேக சலுகை ஜோயாலுக்காஸின் அனைத்து ஷோரூம்களிலும் கிடைக்கிறது. டிசம்பர் 1ம் தேதி வரை இந்த சிறப்பு சலுகையை பெறலாம்.

இதுகுறித்து ஜோயாலுக்காஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ‘‘திருமணங்களின் அழகான தருணங்களை என்றும் மறக்கமுடியாத இனிய அனுபவமாக வைத்திருக்க இந்த விவாஹா உத்சவ் மிகச்சிறந்த மதிப்புடன் தனித்துவமான பிரைடல் ஜூவல்லரி கலெக்ஷன்களை அளிக்கிறது. திருமண நகைகள் வாங்குபவர்களின் விருப்ப தேர்வாக அமையும் வண்ணம் இந்த விவாஹா உத்சவ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நுட்பமான தங்க ஆபரணங்களின் டிசைன்கள் முதல் அதிரவைக்கும் அழகிய வைர ஆபரணங்கள் வரை ஒவ்வொரு மணப்பெண்ணின் விருப்பத்தையும், ரசனையையும் பூர்த்தி செய்யும் விதத்தில் பல்வேறு கலெக்ஷன்கள் அணிவகுத்து நிற்கிறது. தனித்துவமான ஒரு ஷாப்பிங் அனுபவத்தை ஒவ்வொரு மணமகளுக்கும் வழங்குகிறது. மணமகள் தன் வாழ்நாளின் மிக முக்கியமான தனது திருமண நாளை ஓர் இளவரசி கொண்டாடும் சுப விவாஹ வைபவமாக மாற்றுகிறது,’’ என்றார்.

The post திருமண கொண்டாட்டங்களுக்காக ஜோயாலுக்காஸில் விவாஹா உத்சவ் appeared first on Dinakaran.

Read Entire Article