திருமண ஆசைகாட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்

3 months ago 21

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இளம்பெண் வேலை செய்யும் நிறுவனத்தில் திருமணமான வாலிபர் ஒருவரும் ஊழியராக பணியாற்றினார்.

2 பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்த வாலிபர் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இளம்பெண்ணை திருமணம் செய்ய வாலிபர் மறுத்து விட்டதாக தெரிகிறது. மேலும் இளம்பெண்ணுடன் பேசுவதையும் வாலிபர் நிறுத்தி விட்டார். இதுகுறித்து கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில், அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Read Entire Article