திருப்போரூர், சிட்லபாக்கம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணி தொடக்கம்

1 week ago 3

திருப்போரூர்: திருப்போரூர், சிட்லபாக்கம் வட்டாரத்தில் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பித்து தகவல்களை சரிபார்ப்பதற்காக விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை உதவி இயக்குநர் அமுதா தெரிவித்தார். திருப்போரூர் வேளாண்மை உதவி இயக்குநர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்கள் கொடுக்கும் தகவல்களை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக, விவசாயிகளின் நலன் கருதி தனித்தனி அடையாள எண் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்போரூர் மற்றும் சிட்லபாக்கம் வட்டாரத்தில் இதற்கான பணிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அனைத்து கிராமங்களிலும் உள்ள கிராம சேவை மைய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி வேளாண்மை துறை மற்றும் மகளிர் மேம்பாடு திட்ட சமுதாய வள பயிற்றுனர்களாகல் பதிவு செய்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆகவே, விவசாயிகள் தங்களது ஆதார் எண், பட்டா, சிட்டா, அலைபேசி எண் ஆகியவற்றை கிராம சேவை மைய அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post திருப்போரூர், சிட்லபாக்கம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article