திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலை கவுண்டம்பாளையத்தில் கடந்தாண்டு நவம்பரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தனர். 100 நாட்களை கடந்தும், மூவர் கொலை வழக்கில் துப்பு கிடைக்காததால் வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தனர்.
கடந்த நவ., 28ல் சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிக்கொலை செய்தனர். திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டபாளைத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, அவரின் மனைவி அலமேலு. இவர்களின் மகன் செந்தில்குமார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில்குமார், அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது தந்தை, தாயை அழைத்துச் செல்ல செந்தில்குமார் கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு சேமலைக்கவுண்டன்பாளையத்துக்கு வந்துள்ளார். பின்னர் 29-ம் தேதி காலை தோட்டத்துக்கு வேலைக்கு வந்தவர்கள் பார்த்தபோது, தெய்வசிகாமணி தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வீட்டுக்கு வெளியே உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அலமேலு மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தெய்வசிகாமணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். முதற்கட்ட விசாரணையில் தெய்வசிகாமணியின் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 8 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பல்லடம் அருகே மூவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் குற்றவாளிகளைக் கண்டறிய 9 படைகளை காவல்துறை அமைத்தது. ஆனால் கொலை சம்பவம் நடந்து, 100 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவுமில்லை. 100 நாட்களை கடந்தும், மூவர் கொலை வழக்கில் துப்பு கிடைக்காததால் வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தனர்.
The post திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.