நில ஆர்ஜிதத்துக்காக ரூ.1,521.83 கோடி இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை - பதிவுத் துறை தகவல்

6 hours ago 5

சென்னை: நில ஆர்ஜிதத்துக்காக ரூ.1521.83 கோடி இழப்பீடு வழங்கக் கோரி 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பதிவுத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தின் ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி சந்திரசேகர், சேட்டு ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்குகளில் இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை சமர்ப்பிக்க கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

Read Entire Article