திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் பகுதியில் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சுமார் 40 ஆண்டுகளாக செயல்படும் அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கட்டடங்கள் கான்க்ரீட் ஆக மாற்றப்பட்ட நிலையிலும் அங்கன்வாடி மட்டும் இன்னமும் ஆஸ்பெஸ்டாஸ் கொண்ட கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. வெயில் தாக்கத்தை குறைக்க போடப்பட்ட கூலிங் சீட்டுகளும் சேதம் அடைந்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க அப்பகுதியினர் கோரிக்கை appeared first on Dinakaran.