சென்னை: சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார் . இந்த சந்திப்பு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;
திரைக்கலைஞரும் – சமூக செயற்பாட்டாளருமான நடிகர் பிரகாஷ் ராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்த போது நாம் உடன் இருந்தோம். இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் அரசியலமைப்பை – மதச்சார்பின்மையை காப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டும் என்பது உட்பட பல ஆழமான கருத்துக்களை பிரகாஷ்ராஜ் சார் பகிர்ந்து கொண்டார். அவருடைய திரையுலகப்பணி மட்டுமன்றி, சமூகப்பணியும் சிறக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
The post சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு..!! appeared first on Dinakaran.