
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கேசவ மூர்த்தி என்பவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு திருப்பூர்-தாராபுரம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன்பகுதியில் புகை வெளியேறியது.
இதனையடுத்து திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. தீப்பற்றியதும் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக கேசவ மூர்த்தி காரில் இருந்து இறங்கி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.