
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, "பா.ம.க.வில் உள்ள அனைவரும் குழப்பத்திலும், வேதனையிலும் உள்ளனர். உள்ளனர். ராமதாஸ், அன்புமணி இணையாவிட்டால் பாமக நலிவடையும்.
ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைந்து பேசுவதே பிரச்சினைக்கு தீர்வு. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் கட்சியில் கொறடா குறித்து பிரச்சினை ஏற்படாது.
பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு எந்த கட்சியையும் குறை சொல்ல முடியாது. எந்த கட்சியும் காரணமில்லை. பொறுப்புகளை நீக்குவதும் நியமிப்பதும் மாறி மாறி நடைபெறுவதால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது" என்றார்.