திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பலியான சம்பவத்தில் 2 கைது

3 months ago 23
திருப்பூரில் வெடி விபத்து நிகழ்ந்த வீட்டின் உரிமையாளர் கார்த்திக்,  உரிய அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்த அவரது மைத்துனர் சரவணகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நம்பியூரில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வரும் சரவணகுமார், பொன்னம்மாள்நகரில் உள்ள தமது உறவினரான கார்த்தி வீட்டில் வைத்து பட்டாசுகளை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டு 3 பேர்  உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
Read Entire Article