
மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் பெங்களூரு அணி 7 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விராட் கோலி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் , தற்போது உங்களுக்கு பிடித்த பாடல் எது ? என விராட் கோலியிடம் கேட்கப்பட்டது . அதற்கு பதிலளித்த விராட் கோலி. 'நீ சிங்கம் தான்' என்ற பாடல் மிகவும் பிடிக்கும் என பதிலளித்தார் .
சிம்பு நடித்த 'பத்து தல'படத்தில் 'நீ சிங்கம் தான் பாடல்' இடம் பெற்றுள்ளது . இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.