தென்காசி, பிப்.5: திருப்பரங்குன்றம் மலையை காப்பாற்றும் போராட்டத்திற்கு தென்காசியிலிருந்து ரயிலில் செல்ல முயற்சித்த பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலையை காப்பாற்றும் போராட்டம் தடையை மீறி நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பாஜவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து செல்ல முயற்சி செய்தனர். இதேபோல் தென்காசி ரயில் நிலையத்தில் திருப்பரங்குன்றம் செல்வதற்காக காத்திருந்த பாஜவினர் ஒன்றிய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சங்கர சுப்பிரமணியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ராஜ்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி, கவுன்சிலர் லட்சுமண பெருமாள், நகரச் செயலாளர் விஸ்வநாதன், நகர துணைத்தலைவர் நாராயணன், மேலகரம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் மகேஸ்வரன், சண்முகராஜ், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் இசக்கிமுத்து, நகர தலைவர் நாராயணன், இந்து ஆட்டோ முன்னணி கோமதி சங்கர், விசுவ இந்து பரிசத் பஜ்ரங்தள் சபரி மணி உள்ளிட்ட 21 வரை இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
The post திருப்பரங்குன்றம் போராட்டம் தென்காசியில் இருந்து ரயிலில் செல்லமுயன்ற பாஜ, இந்துமுன்னணியினர் 21 பேர் கைது appeared first on Dinakaran.