திருப்பத்தூர் அருகே திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

18 hours ago 2

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் அருகே திருமணமான 4 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் முரளி, வளர்மதி தம்பதியரின் மகள் மீனாட்சி (24). இவருக்கும் திருப்பத்தூர் அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர், கவிதா தம்பதியரின் மகன் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வரும் விஜய் (32) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் இரு வேறு சமூத்தை சேர்ந்த இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் விஜய் வீட்டில் நேற்று முன்தினம் மதியம் யாரும் இல்லாத நிலையில் மீனாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் இது குறித்து தகவலை அறிந்த உறவினர்கள் இவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாட்சியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மீனாட்சியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது என்றும், திருமணத்தின் போது 5 சவரன் நகை கேட்டார்கள் ஆனால் நாங்கள் 3 சவரன் நகை மட்டுமே போட்டோம். அதன் பிறகு பைக் கேட்டார்கள் நாங்கள் கொடுக்கவில்லை. எனவே வரதட்சணை கொடுமை செய்து அடித்துக் கொன்று இருப்பார்கள் என எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து எஸ்பி உத்தரவின் பேரில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திருமணம் ஆகி நான்கு மாதங்கள் என்பதால் திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தீவிர விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி ஜெகநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விஜய் என்பவரை கைது செய்து காவல் நிலையத்தில் உள்ளார் அதேபோல் வருவாய் கோட்டாட்சியர் அறிக்கைக்கு ஏற்றவாறு பிரேத பரிசோதனையின் அறிக்கையின்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை எடுத்து சடலத்தைப் பெற்று அங்கிருந்தவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருப்பத்தூர் அருகே திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article