திருமலை,
திருமலை-திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருமலையில் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்களுக்கான வைகுண்ட துவார தரிசனம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிகிறது. அதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) வரை வைகுண்ட துவார தரிசனத்துக்காக இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டது.
20-ந்தேதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) தரிசன டோக்கன்கள் வழங்கப்படாது. இலவச தரிசன வரிசையில் மட்டுமே செல்ல வேண்டும்.
நாளை ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஆப்லைனில் வழங்கப்பட மாட்டாது. இதேபோல் புரோட்டோ கால் வி.ஐ.பி. பிரமுகர்களுக்கு 20-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துகான சிபாசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.
பக்தர்கள் தங்கள் திருமலை யாத்திரையை மேற்கூறிய அறிவுறுத்தல்களை மனதில் கொண்டு திட்டமிட்டு திருமலைக்கு வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.