திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: காதலன் வெறிச்செயல்

2 hours ago 2

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஜே.ஜே.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 27). இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய பெற்றோர், அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இளம்பெண், அஜயை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அஜய், இளம்பெண்ணை கொலை செய்ய அஜய் திட்டமிட்டார். அதன்படி, தனியாக பேச வேண்டும் என்று இளம்பெண்ணை அஜய் அழைத்து சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் அஜய், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜயை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Read Entire Article