திருப்பதி கோவிலில் டிரோன் பறந்ததால் பரபரப்பு

5 hours ago 2

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஹரினாமா சங்கீர்த்தன மண்டபம் பகுதியில் நேற்று மாலையில் டிரோன் பறப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் டிரோன் பறக்கவிட்ட நபரை திருமலை-திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில், ராஜஸ்தானை சேர்ந்த அன்ஷுமன் தரேஜா என்பது தெரியவந்தது. இதுகுறித்து திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Read Entire Article