திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா: 15-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்

2 hours ago 2

திருப்பதி:

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 19-ம் தேதியில் இருந்து 28-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதையொட்டி 15-ம் தேதி காலை 11.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று கோவில் வளாகம், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் தாமிர, பித்தளை பொருட்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன.

அதன் பிறகு கோவில் முழுவதும் நறுமண திரவியம் தெளிக்கப்படுகிறது. கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் அன்று காலை 8 மணியில் இருந்து 11 மணி வரையிலும், மாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் இலவச தரிசனத்தில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

பிரம்மோற்சவ வாகன சேவைகள் விவரம்:

19-ம் தேதி காலை கொடியேற்றம், இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 20-ம் தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 21-ம் தேதி காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 22-ம் தேதி காலை மகர வாகன வீதிஉலா, இரவு சேஷ வாகன வீதிஉலா, 23-ம் தேதி காலை திருச்சி உற்சவம், இரவு அதிகார நந்தி வாகன வீதிஉலா நடக்கிறது.

24-ம் தேதி காலை வியாக்ரபாதர் வாகன வீதிஉலா, இரவு கஜ வாகன வீதிஉலா, 25-ம் தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா, 26-ம் தேதி காலை தேரோட்டம் (போகி தேர்), இரவு நந்தி வாகன வீதிஉலா, 27-ம் தேதி காலை புருஷா மிருக வாகன வீதிஉலா, மாலை கல்யாணோற்சவம், இரவு திருச்சி உற்சவம், 28-ம் தேதி காலை திரிசூல ஸ்நானம் (தீர்த்தவாரி), மாலை கொடியிறக்கம், இரவு ராவணாசூர வாகன வீதிஉலா நடக்கிறது.

வாகன வீதிஉலா தினமும் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கிறது.

Read Entire Article