திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சாமி தரிசனம்

6 days ago 5

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

நேற்று காலை அவர் ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ்கண்ணாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளாராவ், கூடுதல் அதிகாரி வெங்கையாசவுத்ரி ஆகியோர் வரவேற்றனர்.

கோவிலின் மகா துவாரம் எனப்படும் நுழைவு வாயிலில் வேத மந்திரங்களை முழங்க தேவஸ்தானத்தின் பாரம்பரிய உயரிய வரவேற்பான 'இஸ்தி கப்பல்' வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது.

கோவிலுக்குள் சென்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தங்கக்கொடிமரம், பலிபீடத்தை வலம் வந்து வணங்கினார். தொடர்ந்து கருவறைக்கு சென்ற அவர் மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நீதிபதிக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் வழங்கப்பட்டது. அப்போது வேதபண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.

 

Read Entire Article