திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சிரமம் இல்லாமல் தங்கள் ஆன்மீக பயணத்தை செய்யும் விதமாக மூன்று மாதங்களுக்கு முன்பே தரிசன டிக்கெட் அறைகள் முன்பதிவு செய்யும் விதமாக ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அவ்வாறு ஜனவரி 2025ம் ஆண்டுக்கான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவை டிக்கெட் குலுக்கல் முறையில் பெற அக்டோபர் 19ம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 21ம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.
குலுக்கலில் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு டிக்கெட்டுகளை அக்டோபர் 21ம் தேதி முதல் 23ம் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். அக்டோபர் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஜனவரி மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கர சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.இந்த சேவைக்கு நேரடியாக பங்கேற்காமல் தரிசனம் மட்டும் செய்யும் மெய்நிகர் சேவைக்கு 22ம் தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்து பெறலாம். ஜனவரி மாதம் அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் அக்டோபர் 23ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பெறலாம். ஜனவரி மாதத்திற்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளைகான நன்கொடை வழங்கி விஐபி டிக்கெட்டுகளுக்கு அக்டோபர் 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.
மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனவரி மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களை அக்டோபர் 23 அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் பெறலாம். ஜனவரி மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசனம் ரூ.300 டிக்கெட்டுகள் அக்டோபர் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள பக்தர்கள் ஓய்வறைகள் ஜனவரி மாதத்திற்கு பெற அக்டோபர் 24 அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இதற்காக தேவஸ்தானத்தின் https://ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடும் தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.