சென்னை: திருப்பணிகள் அனைத்தும் முடிந்து இந்தாண்டிற்குள் திருவள்ளுவர் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘‘இந்த ஆண்டு இறுதிக்குள் திருவள்ளுவர் கோயில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்து குடமுழுக்கு நடத்தப்படும்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 18 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்’’ என்றார். இந்த ஆய்வின்போது, மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு, உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுகிசிவம், தேச மங்கையர்க்கரசி, சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி, உதவி ஆணையர் பாரதிராஜா, கோயில் செயல் அலுவலர் தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post திருப்பணி முடிந்து இந்த ஆண்டுக்குள் திருவள்ளுவர் கோயிலில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.