கேதர்நாத்: நடுவழியில் உடைந்த வால் பகுதி; ஹெலி ஆம்புலன்ஸ் அவசர தரையிறக்கம்

4 hours ago 1

ருத்ரபிரயாக்,

கேதர்நாத்தில் புனித பயணம் மேற்கொள்வதற்காக பலர் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவருக்கு சிகிச்சையளித்து மீட்டு கொண்டு வருவதற்காக ரிஷிகேஷ் நகரில் இருந்து ஹெலி ஆம்புலன்ஸ் ஒன்று இன்று புறப்பட்டு சென்றது. அதில், 2 டாக்டர்கள் மற்றும் விமானி ஒருவர் இருந்தனர்.

இந்நிலையில், திடீரென வழியில் அந்த ஹெலி ஆம்புலன்ஸ் வால் பகுதியில் உள்ள இறக்கை உடைந்தது. இதனால், உடனடியாக கேதர்நாத் பகுதியிலேயே ஹெலி ஆம்புலன்ஸ் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதனால், 3 பேரும் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர். இதனை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி ராகுல் சவுபே கூறியுள்ளார். அவர் ஹெலி சேவைக்கான ஒருங்கிணைப்பு அலுவலராகவும் இருந்து வருகிறார்.

Read Entire Article