திருநெல்வேலியில் லாரி மோதி பெண் பலி

2 days ago 2

திருநெல்வேலி டவுன் பர்வதராஜசிங் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை. இவருடைய மனைவி காமாட்சி. நேற்று இவர் டவுன் வழுக்கோடை அருகே மகனை பஸ் ஏற்றி விடுவதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியானது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து காமாட்சி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த காமாட்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article