விஜய் சேதுபதியின் "ஏஸ்" பட 2வது பாடல் வெளியானது

1 day ago 8

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படமான 'ஏஸ்' இறுதிக்கட்டத்தில் உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மிணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

சமீபத்தில் 'ஏஸ்' படத்தின் 'உருகுது உருகுது' எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியானது. ஜஸ்டின் பிராபகரன் இசையமைப்பில் கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை கபில் கபிலன், ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். 'ஏஸ்' படம் மே 23ம் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் விஜய்சேதுபதி, யோகி பாபு நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. திரைப்படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 36 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் "ஏஸ்" படத்தின் 2ம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ஆந்தெம் பாடல் வெளியாகியுள்ளது.

Headphones Check ✔️ Vibe Check ✔️Style ah , Swag ah Second Single from #ACE - Ace Anthem is Out Now ❤▶️https://t.co/kzmgBsxMIj #ACEFromMay23@VijaySethuOffl @rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal @KapilKapilan_ pic.twitter.com/qXtYanHPnQ

— 7Cs Entertaintment (@7CsPvtPte) May 20, 2025
Read Entire Article