ரோகிங்கியா அகதிகளுடன் சென்ற படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து; 427 பேர் பலி

4 hours ago 2

 

நைப்பியிதோ,

மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகள் இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக, வங்காளதேசத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியாக்கள் அதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கடல் வழியாக இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்லும் முயற்சியிலும் ரோகிங்கியாக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வங்காளதேசத்தின் கோக்ஸ் பசார் அகதிகள் முகாமில் வசித்து வந்த ரோகிங்கியாக்களில் 267 பேர் படகு மூலம் இந்தோனேசியாவுக்கு செல்ல முயற்சித்தனர். அப்போது அவர்கள் சென்ற படகு மியான்மர் கடற்பகுதியில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 201 பேர் உயிரிழந்தனர். அதேவேளை 66 பேர் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்துள்ளது.

அதற்கு அடுத்த நாளான 10ம் தேதி 247 ரோகிங்கியா அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மற்றொரு படகு கடலில் கவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 226 பேர் உயிரிழந்தனர். அதேவேளை 21 பேர் உயிர் பிழைத்தனர். இந்த இரு நாட்களில் நடந்த படகு விபத்துகளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். 

Read Entire Article