திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரான சாட்சியை கொன்ற வழக்கில் ஒருவருக்கு தூக்கு: மேலும் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

1 week ago 3

நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட பாளையஞ்செட்டிகுளத்தில் 2016-ல் பெருமாள் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் தரப்பினர் கொலை செய்ய முயற்சி செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில், அதே ஊரைச் சேர்ந்த ராமசுப்பு மகன் வைகுண்டம் (47) என்பவர், செல்வராஜ் தரப்பினருக்கு எதிராக சாட்சியளித்தார். இதனால், வைகுண்டம் மீது செல்வராஜ் தரப்பினர் ஆத்திரமடைந்தனர்.

Read Entire Article